What is Whats App Business Account ??

வணக்கம் உறவுகளே, உள் நாட்டு யுத்தத்தை விட கொடியது இந்த கொரோனா. இலங்கை மட்டும் இல்லை மிகப்பெரிய வல்லரசான உலக நாடுகள் கூட வாயடைத்துப் போய்த்தான் உள்ளார்கள். So என்ன செய்வது அதன் ருத்ரதாண்டவம் இது. இலங்கையில் பல நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று 10.01.2021 தளர்த்தப்பட்டுள்ளது. இந்த பரவல் நிலையின் காரணமாக பல உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படடவர்கள் மீண்டு வந்தவர்கள் என அனைவரும் ஒரு பயத்துடனே காணப்படகின்றனர். சரி நமது தலைப்பிற்கு வருவோம் What is Whats App Business Account ?? இந்த பரவல் காலத்தில் பலர் வேலை இழந்து வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சில புத்திசாலிகள் வீட்டிலிருந்து தங்களது புதிய தொழில் முயற்சிகளை தொடங்கி வெற்றியும் கண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்பொழுது பாவித்து கொண்டிருக்கும் சொல் Whats App Business Account . So தெரிவு செய்து அனுப்புங்கள் பொருள் வீடு தேடி வரும். பணத்தை அவர்களிடம் கொடுக்கலாம் இல்லை என்றால் வங்கிக்கு கடனட்டை or பற்று அட்டை மூலம் செலுத்தலாம்.

Whats App Business Account என்ன செய்கிறது???

2009 இல் தொடங்கப்பட்ட இந்த Whats App சேவையானது மிகப்பிரபல்யமான மெசஞ்சர் செயலியாக (Messenger App) உள்ளது. Almost 2 மில்லியனுக்கு மேல் பயனாளர்கள் செயல்நிலையில் (active) உள்ளார்கள். And 180 நாடுகளில் 60 மேற்பட்ட மொழிகளில் இயங்கிக் கொண்டுள்ளது. இது பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்ற அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். 2018 ஆம் அண்டில் தான் Whats App Business ஐ அறிமுகப்படுத்தினார்கள். இது eCommerce and வளர்ந்து வரும் SME Business ( Small, Medium) போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கின்றது.

Whats App Business நன்மை.

இதில் அரட்டை அடிக்கும் வசதிக்கு மேலதிமாக முக்கியமான பல நன்மைகளும் உண்டு.

  • Display your catalog – உங்களது வியாபாரத்தில் உள்ள பொருட்களின் விலைகள். மற்றும் உங்களிடம் உள்ள பொருட்களின் எண்ணிக்கை அத்துடன் அந்தப் பொருளின் புகைப்படம் என்பற்றை வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தலாம்.
  • Save time with preset responses – இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான கேள்விகளுக்கு முன்னதாகவே பதில்களை சேமித்து வைத்து அவர்களிற்குரிய விடையை அனுப்புகின்றது.
  • Segment your customers – உங்களது வாடிக்கையாளர்களை தனித்தனியாக பிரித்து தேவைக்கேற்ற போல் குழுக்களாக மாற்றி வைக்க உதவுகின்றது.
  • Build distribution lists – ஒரே நேரத்தில் ஒரே செய்தியை பல வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கின்றது.
  • Get stats -என்ன வியாபாரம் நடந்தது , வாடிக்கையாளர்களுக்கு என்ன தகவல் சென்றது எத்தனை சென்றது யார் என்ன கேட்டார்கள் என அனைத்தையும் புள்ளி விபரத்துடன் காட்டுகின்றது.

இவற்றைத்தவிர சில தீமை என்பதை விட கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது மேற்கூறிய நன்மைகள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் இல்லை எல்லாம் மிக அடிமட்டத்திலேயே தான் காணப்படுகின்றது.

Download and Installation Method

அது சரி இதை எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போமானால் முதலில் இங்கே (https://www.whatsapp.com/download)சென்று தேவையான பிளட்போம்( Android or IoS) தெரிவு செய்து தரவிறக்கவும். பினன்ர் install செய்து கொள்ளுங்கள். after உங்களது தொலைபேசி எண்ணைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுஙகள்.

What is Whats App Business Account ??

பதிவு செய்த பின்னர் வரும் அனைத்து Setting களுக்கும் Allow பண்ணுங்கள் . முக்கியமாக ஏன் அதை செய்கின்றோம் என்பதை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.இறுதியாக உங்கள் Profile ஐ உருவாக்குங்கள்.

Whats App Business

அடுத்ததாக மேலுள்ள அனைத்தையும் Fill பண்ணிவிட்டு Category என்பதில் உங்களது வியாபாரத்தின் தன்மையை தெரிவு செய்யுங்கள். for example (பேக்கரி,புடவைகடை இப்படி ஏதாவது). பிறகு கீழுள்ள Show More Options என்பதை click செய்து உங்களது வியாபாரத்தைப் பற்றி சிறிய பதிவு ஒன்று இடுக. அப்படியே வியாபார நிலையம் அமைந்துள்ள முகவரியையும் கொடுத்து Next என்பதை Click பண்ணுங்கள்.

Whats App Business நன்மை.

எல்லாம் உருவாக்கிய பின்னர் உங்களது செயலியில் மேல் மூலையில் உள்ள 3 டொட் ( அந்த புள்ளிகள் தான்) தெரிவு செய்க.வரும் மெனுவில் Business Tools தெரிவு செய்க. அங்குதான் உங்களது வியாபாரத்தின் பொருட்களை காட்சிப்படுத்த போகின்றோம்.இதுதான முக்கியமான செய்முறை.

WhatsApp for Your Business
WhatsApp for Your Business

catalog என்பதில் தெரிவு செய்யும் போது நமது பொருட்களை பற்றி சில தரவுகளை இங்கு பதிவு செய்து வைக்க வேண்டும்.

  • First பொருளின் image
  • Second பொருளின் பெயர்
  • மூன்றாவது பொருளின் விலை , இதை விரும்பினால் நிரப்பமல் விடலாம். பிறகு வாடிக்கையாளருடன் உரையாடி முடித்த பின்னர் தான் விலை நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் இவைற்றை தவிர்த்து செல்லலாம்.
  • Finally பொருளை பற்றிய சிறிய செய்தி ஏதாவது.

இப்படி உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் Catalog பகுதியில் காட்சிப்படுத்தலாம். ஒன்று இல்லை அதற்கு மேற்பட்ட பொருட்களை பதிவேற்றம் செய்க. உங்களிடம் உள்ள பொருட்களை காட்சிப்படுத்துங்கள் . உண்மையில் இது கடையில் பொருட்களை காட்சி்படுத்துவது போன்றதுதான்.

catalog menu

நமது வாடிக்கையாளர்களுக்கு எமது இலக்கமானது நாம் உருவாக்கிய அதே பெயரில் தெரியும். நமது பெயரை தெரிவு செய்ததும் கீழள்ள வகையில் நமது பொருட்கள் அவரிற்கு காட்சிப்படுத்தப்படும்.

whatass6
whatass7

Now வாடிக்கையாளர் தேவையான பொருளை தெரிவு செய்து Message என்பதை அழுத்தும் போது நமக்கு அதைப்பற்றிய தகவல் கிடைக்கும். After That நாம் வாடிக்கையாளருடன் பேச்சு வார்த்தை நடாத்தி வியாபாரத்தை முடிக்கலாம். Finally நமது புள்ளி விபரங்களை அறிந்து வியாபாரத்தை பெருக்கிக் கொண்டு செல்லலாம். And also முக்கியமாக, மேலே குறிப்பிட்ட Business Tools இல் இன்னும் அதிகளாவான பயன்பாடுகள் உள்ளன. அவற்றையும் அவதானித்து வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.