What is Computer Vision Syndrome(CVS)

Computer Vision Syndrome(CVS) , இது பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா. ஆம் இது ஒரு வழகையான வியாதிதான். மாற்றுக் கருத்தே இல்லை.But வேறு வழியும் இல்லை இதற்கு பலர் முகம் கொடுத்தேதான் ஆக வேண்டும். So வாருங்கள் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.


தற்போதைய சூழ் நிலைகளை எடுத்துக் கொண்டால் கணிணி என்ற ஒன்றைப்பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. என்ன வேலை வேண்டும் என்றாலும் கணிணியில் செய்து முடித்து விடலாம் என்ற மன நிலை எல்லோரிடமும் உருவாகியுள்ளது. So Computer and Mobile Devices எல்லாமே நம்மோடு ஒன்றிணைந்து விட்டது. And பின்னிப்பிணைந்தும் விட்டது. அது இல்லாமல் நாம் இல்லை but நாம் இல்லாமல் அது இருக்கும்.

Vision Syndrome(CVS) என்றால் என்ன??

So நாம் பாவிக்கும் கணிணி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களிலுள்ள திரையில் இருந்து வரும் கதிர்கள் மூலம் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புக்களே இந்த Syndrome(CVS) ஆகும். இதன் ஆரம்ப அறிகுறிகளாக கண் எரிச்சல், கண் நோவு and தலையிடியும் சேர்ந்து வருகின்றது.இதனால் கண்களில் பார்வைத்திறன் மிகக்குறைந்த அளவு குறைவடைந்து செல்வதாக அறிய முகின்றது. இந்த குறைபடால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மிக குறிப்பிட்ட அளவில் அதிகரித்துச் செல்லக் கூடியதாக தெரிகின்றது.

சரி கொஞ்சம் விபரமாகப் பார்ப்போமானால், நமது கண்ணை பார்த்தால் தெரியும். அதாவது எமது கண் எப்போதும் சொற்ப இடைவெளிகளில் மூடி திறக்கபப்டும். அப்படித்திறப்பது ஒரு இயற்கை நிகழ்வு. And கட்டாயம் இந்த நிகழ்வு நடந்தே தீர வேண்டும். கண் தூரத்திலுள்ள பொருளைப் பார்க்கும்போது சிலியரித்தசைகள் தளர்ந்து விடுகின்றன. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளை விழியின் அருகில் கொண்டு வரும்போது விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதில்லை. மாறாக லென்சின் மேற்பகுதியின் வளைவுப்பகுதி அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அருகிலுள்ள பொருட்களின் பிம்பம் நன்றாகத் தெரிகிறது

So கண்ணை மூடித்திறப்பதனால் கண்ணுக்கு பல நன்மைகள் உண்டாகின்றது. அதாவது கண்ணில் உள்ள கண்ணீர் சரியான பாதையில் செல்வது உறுதிசெய்யப்படுகின்றது. and இச்செயற்பாட்டால் கண்ணுக்குள் வளிமண்டல காற்றிலுள்ள தூசு துணிக்கைகள் உள்ளே செல்லாமல் தடுக்கின்றது. ஆகவே இச்செயற்பாடு மிகவும் இன்றியமையாதது. நமது கண் இந்த உலகை இரசிப்பதற்கு கிடைக்ப்பெற்ற வரப்பிரசாதம். அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

கண் இமைப்பது குறைந்தால் என்ன நடக்கும்?

நல்ல கேள்வி கண் இமைப்பது குறைந்தால் என்ன நடக்கும். மேலே நாம் சொன்ன வேலைகளுக்கு எதிர்மறையாக நடக்கும். நாம் வெகு நேரம் திரையை பார்ப்பதால் கண் இமைப்பது குறையும் . அப்படிக் குறைந்தால் கண்ணில் உள்ள நீரின் ஓட்டம் சரியாக அமையாது. So கண்ணுக்கு உலர்தன்மை ஏற்படும். அதனால் வழித்திரைகள் உலர்ந்து போகும். அங்கேதான் பார்வை திறன் குறைய ஆரம்பிக்கின்றது.கண்ணில் ஈரப்பதன் குறைவதால் கண்ணரிப்பு, எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் மற்றும் கண்ணில் சில கட்டிகள் போன்றவை தோன்ற ஆரம்பித்து இந்த குறைபாட்டை ஆரம்பித்து வைக்கின்றது. இதை தற்காலிகமாக நிவர்த்தி செய்ய கண்ணுக்கு சொட்டு மருந்துகள் விட்டு கண்ணின் ஈரப்பதத்தை அதிகரிப்பார்கள்.

Also அதிகமானவர்கள் இரவு நேரங்களில் பல மணி நேரம் கைபேசி , கணிணி போன்ற பல இலத்திரனியல் சாதனங்களை அதிகநேரம் பாவிப்பதால் இன்னும் வேறு வகையான உடல் உபாதைகளும் உருவாகின்றது. அவையாவன

 • பசியின்மை
 • தூக்கமின்மை
 • அஜீரணக் கோளாறு
 • முதுகுப்பிடிப்பு கழுத்துப் பிடிப்பு போன்றவை பிரதானமாகும்.

What are the symptoms??

உங்களுக்கு இந்த வாழ்க்கை முறை சார்ந்த குறைபாடு உரவாகிவிட்டது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்

 • கண் எரிச்சல்
 • கண் நோவு
 • கண்ணில் நீர் வடிதல்
 • தலையிடி
 • மங்கலான பார்வை
 • வரண்ட விழிகள்
 • கண்ணில் ஏற்படும் களைப்புத்தன்மை
 • முதுகு கழுத்துப் பின்புறம் நோவு உண்டாதல்.

இந்த அறிகுறிகள் தெரியும் போது நீங்கள் உசாராகி விடவேண்டும். அது மட்டுமின்றி இந்த சூழ்நிலையை கூட்டும் நிகழ்வுகளும் சில உள்ளன அவற்றையும் பார்ப்போம்.

 • போதிய வெளிச்சமின்மை
 • அதிக வெளிச்சம்
 • கணிணியை பயன்படுத்தும் முறை
 • கணிணியை பாவிக்கும் போது நமக்கும் கணணிக்கும் உள்ள தூரம்.

இவை இன்னும் இந்த தாக்கத்தை அதிகரிக்கவல்லது. and தனிநபர்கள் எந்த அளவிற்கு காட்சி அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பது அவர்களின் பார்வை திறன்களின் நிலை மற்றும் டிஜிட்டல் திரையைப் பார்க்கும் நேரத்தைப் பொறுத்தது. தொலைநோக்கு பார்வை மற்றும் Astigmatism, போதுமான கண் கவனம் செலுத்துதல் அல்லது கண் ஒருங்கிணைப்பு திறன்கள் மற்றும் presbyopia,போன்ற கண்களின் வயதான மாற்றங்கள் போன்ற சரிசெய்யப்படாத பார்வை பிரச்சினைகள் அனைத்தும் கணினி அல்லது டிஜிட்டல் திரை சாதனத்தைப் பயன்படுத்தும் போது காட்சி அறிகுறிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

பயனர்கள் அனுபவிக்கும் பல காட்சி அறிகுறிகள் symptoms தற்காலிகமானவை மற்றும் கணினி வேலை அல்லது டிஜிட்டல் சாதனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு குறையும். However, சில தனிநபர்கள் கணினியில் வேலை செய்வதை நிறுத்திய பிறகும், மங்கலான தொலைநோக்கு பார்வை போன்ற குறைவான பார்வை திறன்களை தொடர்ந்து அனுபவிக்கலாம். and இப் பிரச்சனைக்கான காரணத்தை நிவர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை என்றால், அறிகுறிகள் தொடர்ந்து தோன்றும் மற்றும் எதிர்கால டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டினால் இன்னும் நிலமை மோசமடையலாம்.

What is the Treatment for CVS?? (Computer Vision Syndrome(CVS))

So இதற்கு வெவ்வேறு வகையான சிகிச்சைமுறைகள் உள்ளன. and also பொதுவாக திரையை பார்க்கும் வீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கொஞ்சம் குறைக்கலாம். பொதுவாக வேறு நடவடிக்கைகளுக்கு கண்ணாடி பயன்படுத்தாதவர்கள் கணிணி பார்ப்பதற்கு மட்டும் போதுமான கண்ணாடியை பயன்படுத்தலாம். ஏற்கனவே கண்ணாடி பாவிப்பவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படலாம்.

Generally பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட கண் கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் கணினி வேலைகளுக்கு போதுமானதாக இருக்காது. கணினியைப் பார்ப்பதற்கான தனித்துவமான காட்சி தேவைகளைப் பூர்த்தி செய்ய பரிந்துரைக்கப்பட்ட லென்ஸ்கள் தேவைப்படலாம். சிறப்பு லென்ஸ் வடிவமைப்புகள், லென்ஸ் சக்திகள் or பூச்சுகள் பார்வை திறன்கள் and வசதியை அதிகரிக்க உதவும்.

Viewing the computer

What is Computer Vision Syndrome(CVS)

so நாம் இருந்தால் எவ்வாறு கணிணியை பயன்படுத்த வேண்டும் also நின்றால் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மேலே உள்ள படம் தெளிவாக விளக்குகின்றது. இவைதான் எமது உடலையையும் கண்ணையும் பாதுகாக்க சிறப்பான வழியாகும்.

Location of the computer screen.– கணினித் திரையானது திரையின் மையத்திலிருந்து அளவிடப்படும் கண் மட்டத்திலிருந்து 15 முதல் 20 டிகிரி கீழே (சுமார் 4 அல்லது 5 அங்குலம்) மற்றும் கண்களிலிருந்து 20 முதல் 28 அங்குலங்கள் வரை இருக்க வேண்டும்.

Lighting -குறிப்பாக மேல்நிலை விளக்குகள் அல்லது ஜன்னல்களில் இருந்து கண்ணை கூசுவதை தவிர்க்குமாறு கணினி திரையை வைக்கவும். and ஜன்னல்களில் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள் and also மேசை விளக்குகளில் உள்ள மின்விளக்குகளை குறைந்த வோல்டேஜ் கொண்ட பல்புகளுக்கு மாற்றவும்.

Blinking – So அடிக்கடி கண்ணை சிமிட்டிக் கொண்டே இருங்கள்.

Rest breaks– குறைந்தது 2 மணி நேரகணிணி பயன்பாட்டிற்கு பிறகு ஒரு 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். and ஒவ்வொரு 20 நிமிடத்திற்கொரு முறை கண்ணில் கவனம் செலுத்தி அதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

CVS அல்லது டிஜிட்டல் கண் அழுத்தத்துடன் தொடர்புடைய பார்வை சிக்கல்களைத் தடுப்பது அல்லது குறைப்பது என்பது சாதனத் திரையில் வெளிச்சம் மற்றும் கண்ணை கூசும் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, திரையைப் பார்ப்பதற்கான சரியான வேலை தூரம் மற்றும் தோரணையை நிறுவுதல் மற்றும் சிறிய பார்வை சிக்கல்கள் கூட சரியாக சரி செய்யப்படுவதை உறுதிசெய்வது ஆகியவை அடங்கும்.

Suggestions for computer vision syndrome sufferers

So வேறு வேலைகளுக்கு நாம் கண்ணாடி பயன்படுத்தா விட்டாலும் பரவாயில்லை கட்டாயம் கணிணி வேலை செய்வதற்கு வைத்தியரின் அனுமதியுடன் பெறப்பட்டகண்ணாடிகளை உபயோகிப்பதால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. and ஒரு வருடத்திற்கொருமுறை கட்டாயம் கண்ணை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நமது கண்களுக்கு மேலே உள்ள அறிகுறிகள் தென்படத்தொடங்கியதும் blue light and glare போன்றவற்றை குறைப்பது மிக நல்லது அல்லது so தேவையான கண் பயிற்சியை செய்யத் தொடங்குவதும் வரவேற்கத் தக்கது.

நாம் பயன்படுத்தும் பிரதி எடுத்த பேப்பர் வேறு விதமாகவும் திரைகள் வேறு விதமாகவும் கண்ணால் பார்க்கப்படும். ஆகவே நமது கண்ணிற்கு தேவையான தூரத்தில் இந்த பிரதிகளையும் மற்றும் கணணிகளையும் வைத்துக் கொள்ளலாம்.

இன்றைய தொழிநுட்ப உலகில் கணிணி நம்மோடு ஐக்கியமாகிவிட்டதால். அதையும் பயன்படுத்தி ஆகவேண்டிய நிலை அனைவரிற்கும். ஏன் என்றால் நமது வேலைப்பளு வெகுவாக குறவடைகின்றது. வேலையும் முக்கியம்தான் இருந்தாலும் எமது உடல் நலமும் இன்னும் முக்கியம். So ஆரோக்கியமாக நாம் இருந்தால் மட்டும் தான் வேலைகளையும் செய்ய முடியும். வேலை செய்தால் தான் பணமும் கிடைக்கும் எமது குடும்பத்தையும் பராமரிக்கலாம். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொன்னாலும் பணம் இல்லாவிட்டாலும் எதுவும் இல்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

கட்டாயம் கண்ணிற்கும் மனதிற்கும் அடிக்கடி உடற்பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். Actually சரியான உடற்பயிற்சி கிடைக்கும் பட்சத்தில் உறுப்பகள் சீராக இயங்கும். அப்படி சீராக இயங்கினால் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். If மனம் ஆரோக்கியமாக இருந்தாலே நோய்கள் நம்மை அண்டாது. So அப்படியென்றால் மரணமும் பிற்போடப்படுகின்றது.

and இது போன்ற நல்ல தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் நாமும் எமது குழுவும் மிகவும் பெருமை கொள்கின்றோம். அப்படியே இககட்டுரையை வாசிப்பவர்கள் யாராயிருந்தாலும் உங்களுக்கு ஏதேனும் ஒரு விடயம் புதிதாக தெரிந்திருந்தாலோ அல்லது பிடித்திருந்தாலோ கட்டாயம் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். Or இதை அவர்களுக்கும் பகிருங்கள். அனைவரும் ஒன்றாய் பலன் பெறுவோம்.

பல பின்னூட்டங்கள் வந்து கொண்ட வண்ணமாய் இருக்கின்றது எமது தளத்திற்கு. and அவர்கள் கேட்ட தலைப்புகளில் சிலது வெளிவந்து விட்டது. இன்னும் வெளிவரும். அனைவரது கேள்விகளுக்குமுரிய விடைகள் பதிவுகளாக தொடரும். also இன்னும் கேள்விகள் வந்த ஒழுங்கு முறையில் தான் நாம் பதிவுகளை இட்டுக் கொண்டுள்ளோம். கட்டாயம் அனைவருக்கும் பதில் வழங்கப்படும்.

Finally வெவ்வேறு நாடுகளிலும் எமது இணையத்தளம் பார்வையிடப்படுகி்ன்றது என்பதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. பார்த்த பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.