Tamil Song Lyrics by Vairamuthu
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும். தமிழ் இலங்கை, இந்தியா உட்பட , மலேசியா ,சிங்கப்பூரில் பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. இப்படி பல இலக்கிய வரலாறு கொண்ட தமிழ் சினிமாவின் ஒரு அற்புத கலைஞனின் சில இலக்கிய சிமிட்டல்கள்தான் இங்கே Tamil Song Lyrics by Vairamuthu என்ற தலைப்பில் எழுதுகின்றோம்.
கவிஞர் வைரமுத்துவைப்பற்றி
இந்தியாவி்ன் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 இல் “நிழல்கள்” திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது..” எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். And இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.Even though அவர்கள் கூட தற்பொழுது சினிமாவை கட்டியாள்கின்றார்கள். கவிஞர் வீட்டு கைத்தறியும் கவிபாடும் என்று சும்மாவா சொன்னார்கள்.
அப்படிப்பட்ட கவிஞன் பல படைப்புக்களை நமக்காக தந்துள்ளான். அனைத்தும் இரத்தினங்கள். அதைவிட பெறுமதி ஏதும் இருந்தாலும் உவமைக்கு அதை எடுத்துக் கொள்ளுங்கள். Also அற்புதமான வரிகளின் வள்ளல் அவர். என்ன பாடலுக்கு என்ன தேவையோ அதை அப்படியே நமக்கு வரிகளாய் கொட்டுவார் பருக வேண்டியதுதான் நமது வேலை. And மறைந்த பாடும் நிலா பாலசுப்ரமணியமுடன் அவர் சேர்ந்தால் இன்னும் தேனாய் திகட்டும் பாடல்கள் என்ன குரல் என்னா வரி . Finally ரஹ்மானும் இசையமைக்க சேர்ந்தால் இன்னிசை முடிவிலிதான். என்ன இனிமை.
இந்த வைரமுத்து எழுதிய பல பாடல்கள் நம்மை இன்னும் குடைந்து எடுத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் நாம் சில பாடல் வரிகளை உதாரணங்களிற்காக தொகுத்துள்ளோம்.பல விரதுகளை அள்ளிக் குவித்துள்ள வைரமுத்துவின் வைர வரிகள் சிலவற்றை கீழே பார்ப்போம்.
Tamil Song Lyrics by Vairamuthu – சில பாடல்களின் வைரவரிகள்
“யாயும் ஞாயும் யாராகியரோ ” அப்படி என்றால் என்ன என்று யோசிக்கின்றீர்களா என் தாயும் உன் தாயும் யார் யாரோ? குறுந்தொகைப் பாடல் எண் 40 இல் குறிப்பிடப்பட்ட பாடலை என்னவாக கையாண்டிருக்கின்றார் பாருங்கள். யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன. யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன. அப்பா என்னா வரிகள் இதயம் சேரும் காதல் கனியும் பாடல்தான் இது. மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன. பெண்ணினுடைய கண்ணை விவரிக்கின்றார் மான் போன்ற விழிகளையுடைய பெண்ணே என் மார்பை ஏன் துளைத்தாய். எப்படி வரிகள்.
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி, இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி. ஒரு பெண்ணை இதற்கு மேல் எப்படி அழகாக விவரிக்க முடியும். விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி . கூந்தலை அழகாக விளித்துள்ளார் விடிந்தாலும் உன் கூந்தல் வாசம் இன்னும் போகவில்லை. உலகமே இருண்டாலும் உன் கண்கள் வெளிச்சமாக உள்ளதடி. காதல் மயக்கம் அப்படியே உடம்பு முழுவதும் ஊறிச்செல்கின்றது.
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி, காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி . ஒரு காதல் வயப்பட்ட இளைஞனோ அல்லது யுவதியோ இப்பாடலைக் கேட்டால் அப்படியே மிதந்து செல்வார்கள். கடலிலே மழைத்துளி சேர்ந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும் இது மழைத்துளி என்று. அது போல்தான் நானும் உன்னுள் கலந்து விட்டேன் காதலி.
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும். காதல் என்ற உணர்வு ஒன்றுதான் ஆனால் அது எல்லா உள்ளங்களிற்கும் மாறி மாறி போய்க்கொண்டே இருக்கும்.
Tamil Song Lyrics by Vairamuthu ,
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம், வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள், இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும். ஐயோ ஐயோ என்ன வரிகள். for Example காதல் கடிதம் எழுத மேகத்தை காகிதமாக வர்ணிக்கின்றார். வானத்தின் நீல நிறத்தை கொண்டு வா ஏனென்றால் உன்னைப்பற்றி எழுத நினைத்தால் பேனாவில் உள்ள மை காணாமல் போய் விடும் ஆகவே வானின் நீல நிறத்தை எடுத்து வா. சந்திரனும் சூரியனும் தான் நமக்கு போஸ்ட் மேன்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், காதல் என்று அர்த்தம்.கடலை வானம் கொள்ளையடித்தால், மேகம் என்று அர்த்தம். கொள்ளையையும் காதலையும் சேர்த்து ஒரு கவிதை. ஆணின் கண் பெண்ணின் கண்ணையோ or பெண்ணின் கண் ஆணின் கண்ணைக் கொள்ளை கொண்டால் காதலாம். Same thing வானம் கடலில் இருந்து நீர் ஏற்றினால் அது மழைமேகம். So இரண்டுமே கொள்ளைதான் and இரண்டும் காதலேதான்.
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் ,நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம். பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம். ஒரு தந்தை மகளிற்கிடையிலான் வரிகள்.
Tamil Song Lyrics by Vairamuthu
சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடந்தானே. ஒரு பெண் திருமணமாகி மறுவீடு செல்வதை இப்படி செஞ்சை அடித்து உடைத்தது போல் கூறுகின்றார். தவளை நீரிலும் நிலத்திலும் வாழ்வதைப் போல் ஒரு பெண் தாய்வீடு கணவன் வீடு என்று இரண்டு வீட்டில் வாழ்வதைக் காட்டுகின்றது.
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார் காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார் காலம். பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம். தமிழர்கள் ஒரு ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர். அதில் கார் காலம் என்றால் மழை பொழிவதற்கான காலம் என்று கூறுவார்கள். வண்டுகள் பூவிலும் . கனைக்கும் தவளை சேருவதும் அத்துடன் ஆண் குயில் தன் இனப்பெருக்கத்திற்காக பெண் குயிலைத்தேடுவதும் இந்த மழைகாலத்தில் தானாம் அதைத்தான் இங்கே கூறியுள்ளார்.
பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம். தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுன்னும் சத்தம் சங்கீதம். சந்தோசம் மற்றும் சங்கீதத்தையும் சேர்த்து இப்படிக் கூறுகின்றார். பசிக்கும் நேரம் கறி செய்வதற்கு தாளிப்பதும் ஒரு சந்தோசம் தான். பிள்ளை தாயின் மார்பை முட்டி பால் குடிக்கும் சத்தம் கூட சந்தோசம் தான். எப்படி ஒரு வரி அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் இதன் அருமை.
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு, ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம். கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம், ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள். கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள், ஒன்றை சேர்ந்தால் எந்தன் நெஞ்சம். ஒரு பெண் தன்னை கொஞ்சம் வெறித்தனமாக விமர்சிப்பது போல்தான் இவை உள்ளது. சந்திரனின் குளிர்ச்சியும் சூரியனின் வெப்பமும் கொண்டது தானாம் பெண்ணின் தேகம்.நஞ்சும் உண்டு அமிர்தமும் உண்டு. கடவுளும் உண்டு மிருகமும் உண்டு பெண்ணில் என்று வரிகள்.
நேற்று காதல் கொண்டு இன்று கணவன் கொண்டு, நாளை அடுப்பினில் வெந்திட ஆசை இல்லை. ஒரு ஆணை நம்பாத நவீன பெண்ணின் கூற்று. காதல் , கலியாணம் செய்த பிறகு சமையலுக்காக அடுப்பில் காலம் முழுவதும் வெந்திட ஆசை இல்லை. ஒரு பெண்ணின் உண்மையான உள்ளக் குமுறல்தான் இது.
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன். நிலவை தூரத்தில் கொண்டு வைத்தவன் யார் காற்றை உணரலாம் கையால் பிடிக்க முடியாது. இதை எண்ணி நான் இயற்கையை அதிசயிக்கின்றேன்.
Tamil Song Lyrics by Vairamuthu ,
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி. சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன், ஆஹா அவனே வள்ளலடி. ஒரு பெண்ணின் உடலை விபரிக்கின்றார். இடுப்பை பார்த்தேன் மெல்லியதாக உள்ளது உடனே உன்னைப்படைத்த பிரம்மனை கஞ்சன் என்று நினைத்தேன். கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தேன் தலை சுற்றிப் போய்விட்டேன் அவன் வள்ளல்தான் என்று சொல்கின்றார். அப்படி எதைப்பார்த்திருப்பார். கொஞ்சம் குசும்பன் தான்.
மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை. மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது. மனிதர்களுக்கு மண்ணின் மேல் ஆசை உள்ளது. மண்ணுக்குச் சண்டை நடந்த வரலாறுகள் இன்னும் தொடர்கின்றது. கடசியில் எல்லாரும் மண்ணுக்குள்ளதான் போகின்றார்கள். எப்பவும் மண் தான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கைத்தத்துவம்.
தாயை தேர்ந்தெடுக்கும், தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை. முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை. பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை. எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு. நீ யாருக்கு மகனாக வேண்டும் .என்ன நிறத்தில் பிறக்க வேண்டும் உன் முகம் எப்படி இருக்க வேண்டும் எப்போ பிறக்க வெண்டும் எப்போ இறக்க வேண்டும் என நீ முடிவு செய்ய இயலாது. நேரம் வரும் போது எல்லாம் நடக்கும். இன்று என்பது மட்டும் தான் எம் கையில் அதை நல்ல படியாக வாழ்ந்தால் போதும். எவ்வளவு பெரிய தத்துவம்.
தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு? குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு?. தங்கம் வைரம் என அனைத்தையும் பூட்டிவைக்கலாம் . ஆனால் உயிரைப் பூட்டி வைக்க உன்னிடம் ஏதும் பூட்டு இருக்கின்றதா எனக் கேட்கின்றது இந்த வரி. குழந்தையும் ஒன்றும் வேண்டாம் என்ற ஞானியும் மட்டும் தான் இங்கே சந்தோசமாய் இருக்கின்றார்கள். மற்றவர் அனைவருக்கும் ஏதோ ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை. அறிவு தொழிநுட்பம் பற்றிய பார்வை. So கருவில் தோன்றிய உயிர்கள் கட்டாயம் ஒருநாள் மரணிக்கும். But அறிவிலிருந்து தோன்றுபவை அழிவதே இல்லை வாழ்ந்த கொண்டே இருக்கும்.
Tamil Song Lyrics by Vairamuthu ,இன்னும் கவிஞரின் பாடல் வரிகள் தொடரும்.
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.