Srilanka CERT|CC

Sri Lanka Computer Emergency Readiness Team and Coordination Center இதைத்தான் நாம் Srilanka CERT|CC என்போம். தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறையில் இலங்கை மிக வளரச்சியடைந்து வருகின்றது.ஏதாவது வளர்ச்சி அடையும் போது ஆங்காங்கே சில தவறுகளும் நடக்கத்தான் செய்கின்றன.அப்படி நடந்தால் யாரை அணுகுவது எப்படி அணுகுவது என்பதற்காகவே இந்தப்பதிவு.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால்(ICTA) இலங்கையின் தேசிய கணினி அவசர தயார் நிலை அணியாக 2006 ல் , இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி| ஒருங்கிணைப்பு மையமாக நிறுவப்பட்டது Srilanka CERT|CC . இலங்கையின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் விரைவான வளர்ச்சி காரணமாக இணைய பாதுகாப்பு (Cyber Security ) சம்பவங்களின் அதிகரிப்புக்கு தீர்வு காண்பதே CERT ஐ நிறுவுவதற்கான முக்கிய காரணமாக இருந்தது. Specially இது ஒரு தனியார் லிமிடெட் நிறுவனமாக( Pvt- LTD) பதிவு செய்யப்பட்டுள்ளது. and இலங்கை கணினி அவசர தயார் நிலை அணி தற்போது தொழில்நுட்பம் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. So அவர்களது மேற்பார்வையிலேயே தனது சேவையை செய்து வருகின்றது.

இலங்கை CERT | CC யானது Cyber தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலமும், சாத்தியமான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்புக்களை விரைவாக வலுப்படுத்துவதன் மூலமும் இணையப் பாதுகாப்பை தீவரப்படுத்துகின்றது.Anyways இணையத்தளங்கள் அல்லது நிறுவனங்களின் தரவுத்தளங்கள் எதுவாயினும் தாக்குதலுக்குட்படும் போது இவர்கள்தான் அதை எப்படி நிறுத்துவது மீண்டும் தாக்கப்படாமல் எப்படி தவிர்ப்பது போன்ற அனைத்து ஆலோசனைகளையும் முன்வைப்பர்.

Providing Services of Srilanka CERT|CC

அவர்களைப்பற்றி அறிவதற்கும் அணுகுவதற்கும் Click the link. இவர்களது சேவைகளை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

1.இலங்கையின் தேசிய சான்றிதழ் ஆணையகத்தை(NCA) நிறுவியமை.( மார்ச் மாதம் 2020)

2.தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு வியூகம் ஆரம்பிக்கப்பட்டமை.( ஆடி மாதம் 2018)

இதைப் போல் பல முக்கிய செயற்பாடுகளை இன்னும் வழங்கவும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டுள்ளார்கள். and அவர்களது பொது சேவைகள் வருமாறு.

1. பொறுப்பு சேவைகள் (Responsive Service ) – இவை இணைய வழி தொகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளால் தூண்டப்படும் சேவைகள் ஆகும். இதற்கான எடுத்துக்காட்டுகளாக ஸ்பேம், வைரஸ் தொற்றுகள் மற்றும் ஊடுருவலை கண்டறிதல் முறையால் கண்டறியப்பட்ட அசாதாரண நிகழ்வுகள் என்பன உள்ளடங்குகின்றன.

2.விழிப்புணர்வு சேவை (Awareness Service)- இந்த சேவைகள் தகவல் பாதுகாப்பின் (Information Security) முக்கியத்துவம் மற்றும் தகவல் பாதுகாப்பு அடிப்படைகள் முதல் சிறந்த நடைமுறைகள் சமீபத்திய இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் போன்ற உடனடி சிக்கல்கள் வரையிலான தொடர்புடைய தலைப்புகள் குறித்து கல்வி கற்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

3.ஆலோசனை சேவைகள் (Consultancy Service) – இந்த சேவைகள் தொகுதிகளுக்கான தகவல் பாதுகாப்பு அமைப்புகளின் போதுமான அளவை தீர்மானிப்பதற்கான வழிமுறைகளை வழங்கின்றது. Moreover (தேவைப்பட்டால்) அதன் பாதுகாப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

And also இலங்கை தேசிய செயற்பாடுகளும் வழங்கப்படுகின்றன.

1.Government Website Audit Initiative

2.National Certification Authority (NCA) of Sri Lanka

3.National Cyber Security Operations Centre (NCSOC)

4.National Information and Cyber Security Strategy of Sri Lanka (2019-2023)

5.Cyber Resilience for Development (Cyber4Dev) . இவையனைத்தும் இலங்கையில் தகவல் பாதுகாப்புக்காகவும் இணைய வழி தாக்குதல்களை தடுப்பதற்காகவும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணியல் தடயவியல் விசாரணை சேவைகள்.Digital Forensics Investigations

இலங்கை CERT|CC தற்போது இரண்டு வகையான வாடிக்கையாளர்களுக்கு எண்ணியல் தடயவியல் விசாரணை சேவைகளை வழங்குகிறது.

1. இலங்கை நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி இலங்கை காவல்துறைக்கு.

2.தனியார் / பொதுத்துறை நிறுவனங்கள் – இலங்கை CERT | CC எண்ணியல் தடயவியல் விசாரணைகளின் பரந்த பகுதியை உள்ளடக்கிய விரிவான நிபுணத்துவத்தை வழங்குகின்றது. இந்த அணியானது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எண்ணியல் தடயவியல் விசாரணைகளை கையாளுவதில் வெற்றிகரமாக செயற்படுகின்றது.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.