Microsoft Office 2021
வணக்கம் உறவுகளே, Microsoft நிறுவனம் தனது Application களை புதுப்பொலிவுடனும் புதுமையான விடயங்கள் பலவற்றுடனும் சேர்த்து மெருகேற்றம் செய்து வெளியிடும். அத்துடன் நேரத்திற்கேற்றாற்போல் எல்லாமே Upgrade ஆகிவிடும். So அந்த வகையில் வெளியாக இருப்பதுதான் Microsoft Office 2021. ஏற்கனவே அவர்களின் Application களான MS Word, Ms Excel, Ms Access , MS PowerPoint MS Team and Etc…… இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுத்தான் இருக்கின்றோம். திரும்ப புது அவதாரங்கள் கிடைத்ததும் இன்னும் அடிமையாகப் போகின்றோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்கள் தங்களது எல்லா Application களையும் பாவிப்பதற்கு பாவனையாளர்கள் கஷ்டப்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார்கள்.
இந்த Software, October 5th வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே Windows 11 கூட ளெியாகும் என்று அறிவிப்பு விடுத்துள்ளனர். ஏற்கனவே Windows 11 ஐ பரிசோதனைக்காக வெளியிட்டிருந்தார்கள். அது பல பரிசோதனை ஓட்டங்களை தாண்டி இப்பொழுது மக்கள் மத்தியில் October 5 ஆம் திகதி பாவனைக்கு வருகின்றது. Windows 11 பற்றிய பார்வை எமது அடுத்த பதிவில் இடம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் இரண்டும் ஒரே தினத்தில் வெளியாகினாலும் Windows 11 உடன் Microsoft Office 2021 இணைக்கப்பட்டிருக்காது என்பதை மன வருத்தத்துடன் தான் சொல்லிக் கொள்கின்றோம். நீங்கள் இரண்டையும் தனித்தனியாகத்தான் வாங்க வேண்டும்.
அத்துடன் Microsoft Office 2021 ஆனது அப்பிள் நிறுவனத்தின் macOS உடன் சேர்ந்து வேலை செய்யக் கூடிய விதத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது , So Platform Independent. இதன் பயனாளர் இடை வெட்டு (User Interface) ஐ Windows 11 ற்கேற்றாற்போல் தான் அமைத்துள்ளார்கள் அனைத்தும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. எல்லாம் சரி அதன் விலையை பார்த்தால் கொஞ்சம் அதிகம் போல்தான் தெரிகின்றது. Anyhow எத்தனை பேரின் உழைப்பு இதற்குப்பின்னால் உள்ளது So அதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Microsoft Office 2021 price
Office Home and Student 2021 இனுடைய விலை ஆனது $149.99 என அறிய முடிகின்றது. இன்று 1 அமெரிக்க டொலரின் பெறுமதி 199.71 இலங்கை ரூபாய் ஆகும். So கிட்டத்தட்ட 29953.90 ஆகும். அதிலே access to Word, Excel, PowerPoint, One Note, and Teams என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. Next சிறிய தொழில் மற்றும் வியாபாரங்கள் செய்பவர்களுக்கு Office Home and Business 2021 சிறந்தது ஆகும். இதன் விலை தோராயமாக $249.99 ஆகும். கிட்டத்தட்ட 49924.50 இலங்கை ரூபாய் ஆகும்.
இது பாவனைக்கு வந்த பின்னர் அதன் புது விடயங்கள் என்ன எப்படி வேலை செய்கின்றது, நாம் ஏன் அதற்கு மாறவேண்டும் என அனைத்தையும் அலசி ஆராய்வோம். இது Windows 10 பாவிப்பவர்களுக்கும் நல்ல பயனைத்தரும் என நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர். Finally Bad News ஒன்று அதாவது Microsoft Office 2013 ஆனது Windows 11 ற்கு Support பண்ண மாட்டாது என்பதாகும். எல்லாமே இராஜ தந்திரங்கள்தான் மக்களே, இதைத்தான் நாம் வியாபார தந்திரங்கள் என்போம்.
Also Read Microsoft Windows 11
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.
Pingback: Microsoft Widows 11 - InfodataLanka