List of National College of Educations in Sri Lanka

வணக்கம் இன்றைய தொகுப்பாக நாம் தருவது இலங்கையிலுள்ள தேசிய கல்விக் கல்லூரிகளின் விபரங்கள் ஆகும் ( List of National College of Educations in Sri Lanka ). எத்தனை பேருக்கு இலங்கையிலுள்ள தேசிய கல்விக் கல்லூரிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றித் தெரியுமென்று தெரியாது. சிலருக்கு தெரிந்திருக்கலாம் So அவர்கள் தேவையேற்படின் வாசிக்கவும் and தெரியாதவர்கள் வாசித்துப் பயன்பெற்று மற்றவர்களும் பயன்பெற இந்தப்பதிவை பகிர்ந்து அனைவருக்கும் அறியச்செய்க.
Why We Need National College of Educations
பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மற்றும் கிடைத்த மாணவர்கள் கல்விக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யலாம். இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு பதிவுசெய்து அதை தொடரும் மாணவர்கள் இங்கு பாடத்திட்டத்தை தொடர அனுமதி கிடையாது. பாடத்திட்டம் தயாரித்தல், கற்றல்/கற்பித்தல் மற்றும் மதிப்பீடு போன்ற NCOE இன் அனைத்து கல்வி நடவடிக்கைகளுக்கும் ,வழிகாட்டல் and கண்காணிப்புக்கு தேசிய கல்வி நிறுவனம் (NIE) பொறுப்பாகும். இங்கு கற்றல் நடவடிக்கைகளைத் தொடர மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்ட கல்லூரிகளில் தங்கியிருக்க வேண்டும். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் கல்வியமைச்சினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்குரிய உணவு தங்குமிட வசதி போன்றன இங்கு மிகச்சிறப்பாக உள்ளன. Once தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் முதல் இரண்டு வருடமும் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களிற்குரிய அனைத்து பயிற்சிகளும் தெரிவுசெய்யப்பட்ட வளவாளர்களால் வழங்கப்படும். Final Year ஆசிரியர் பயிலுனர்கள் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு மாணவர்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி பயற்சியை பெறுவார்கள். இந்ததருணத்தில் மாணவர்களை எப்படி கையாள்வது எப்படி ஒரு பாடத்தை கற்பிப்பது என்று சகல பயிற்சிளையும் பெறுவார்கள். இந்த பயிற்சிக் காலத்தில் அவர்களது சில தேவைகளை நிறைவு செய்வதற்காக குறிப்பிட்ட அளவு தொகை பணம் வழங்கப்படும்.
1.Addalachahenai National College of Education
2.Batticaloa National College of Education
3.Dharga Nagar National College of Education
4.Hapitigam National College of Education
5.Jaffna National College of Education
6.Maharagama National College of Education
7.Mahaweli National College of Education
8.Nilwala National College of Education
9.Pasdunrata National College of Education
10.Peradeniya National College of Education
11.Pulathisipura National College of Education
12.Ruhuna National College of Education
13.Ruwanpura National College of Education
14.Sariputta National College of Education
15.Siyane National College of Education
16.Sri Pada National College of Education
17.Uva National College of Education
18.Vavuniya National College of Education
19.Wayamba National College of Education
What happen in the National College of Educations :-
கற்றல் நடவடிக்கைகளை நிறைவு செய்த ஆசிரிய பயிலுனர்களுக்கு Diploma சான்றிதழ் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் தேசிய பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக அமர்தப்படுவர். அவர்கள் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் போதே அவர்களுக்குரிய Appointment ம் உறுதியாகின்றது.அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறியதும் அவர்களுக்குரிய வேலைவாய்ப்பும் கிடைக்கின்றது. மிக அருமை அல்லவா மாணவர்களே யோசித்து செயலாற்றுங்கள். இந்த திட்டம் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். ஏதாவது ஒரு கல்வியை தொடர்ந்து வேலைகிடைக்க வில்லை என்று பல போராட்டங்கள் இன்னும் நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
அத்துடன் இப்போது வழங்கப்படும் டிப்ளோமா கூட எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு இளநிலைப்பட்டமாக மாறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். கல்லுரியில் தங்கி இருக்கும் காலங்களில் உணவு, தங்குமிடம் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றது. After that வேறு என்ன வேண்டும் ஏழை மற்றும் இடை நிலை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் இதைப்பயன்படுத்தி நன்மைகளை பெற்றுள்ளனர் இனியும் பெறுவார்கள் என நாங்கள் ஆணித்தரமாக நம்புகின்றோம்.
So யார் என்ன சொன்னாலும் மிகச்சிறந்த கட்டுப்பாடுகள் இங்கே பின்பற்றத்தான் படுகின்றது. ஆடை சம்பந்தமாவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளது. தேவையற்ற விதமாக ஆடை அணிவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. and கல்வி கற்கும் காலங்களில் திருமணம் செய்வது என்பது இயலாத ஒன்று. அதை மட்டும் அவர்கள் தியாகம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் போது இந்த தியாகம் செய்வதில் ஒரு சிக்கல்களும் அவர்களுக்கு ஏற்படாது. எங்களைப் பொறுத்தவரை இதை தியாகத்தின் பட்டியலில் கூட சேர்க்க முடியாது. List of National College of Educations in Sri Lanka பற்றிய சிறிய பதிவு இது இன்னும் இதைப்பற்றி அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவும்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.
good Job,