IPl T20 -2021 RR vs CSK Match No 47

IPL T20 , 2021 Match No 47 CSK vs rr.PNG
https://www.iplt20.com/match/2021/47?tab=scorecard

வணக்கம் உறவுகளே, இன்றைய IPl போட்டிதான் பல நாட்களுக்கு பிறகு நடைபெற்ற ஒரு சுவாரசியமான போட்டி என்று சொல்ல வேண்டும். உண்மையைச் சொன்னால் பல நாட்களுக்குப் பிறகு IPl போட்டி பார்த்தது போல் ஒரு உணர்வு. Because இதுவரை நடந்த இரண்டாம் கட்ட போட்டிகளின் சராசரி ஒட்ட எண்ணிக்கை வெறும் 127 தான். But ஒரே அலுப்பா போச்சுப்பா Matches என்ற நிலைதான். இன்றைய போட்டிதான் சரவெடி மெட்ச். So இந்த IPl T20 -2021 RR vs CSK Match No 47 போட்டியை யாரும் இலகுவாக மறக்க முடியாது. அனைவரும் சரவெடி கொழுத்திய போட்டியாகும். உண்மையைச் சென்னால் CSK Already Qualify ஆகியிருந்த நிலையில் இன்றைய முதலாவது போட்டியில் டெல்லி Qualify ஆகியிருந்தது.

CSK Summary (IPl T20 -2021 RR vs CSK Match No 47)

First களம் இறங்கிய CSK ன் பாப் டுப்ளசிஸ் and ருத்ராஜ் செமையாக ஆட்டத்தை தொடங்கினார்கள். இதில் ருத்ராஜ் 41 பந்துகளில் 50 ரன்களைப் பெற்றிருந்தார். மிகுதி 51 ரன்களை வெறும் 20 பந்துகளில் பெற்று ஆட்டத்தை சூடாக்கினார்.பிறகு வந்த ரெய்னா வேகமாக பெவிலியன் திரும்பினாலும் மொயின் அலி கொஞ்சம் நின்று பிடித்தார். after that வந்த ராயுடுவும் பெவிலியின் திரும்பினாலும் ஜடேஜா ஒரு காட்டுக் காட்டினார். செமஅடி ஒரு கணம் ருத்ராஜ் 95 அடித்திருந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளுக்கும் அவரே முகம் கொடுத்தார். எல்லாருக்கும் ஒரு கணம் இதயம் நின்று வந்தது. ஏன் என்றால் 2021 ஆம் ஆண்டு யாரும் 100 அடிக்காத நிலையில் ருத்ராஜ் ஆவது அதை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பாவி ஜடேஜா விட மாட்டான் போலவே இருந்தது. இருந்தாலும் ருத்ராஜ் கடைசி பந்தில் 6 அடித்து 101 ரன்களை பெற்றார். இருந்தாலும் ஜடேஜா முழங்காலில் இருந்து ஒரு 6 ரன் அடித்தான் எல்லாருக்கும் செம shock. வெறும் 15 பந்துகளில் 32 ரன்களைப் பெற்றார்.

RR Summary (IPl T20 -2021 RR vs CSK Match No 47)

சேசிங் வந்த RR முதல் பந்து முதலே அதிரடி காட்டத் தொடங்கினார்கள். லிவிஸ் மற்றும் ஜெயஸ்வால் மிகமிகச் சிறப்பான துடுப்பாட்டத்தை காட்டினார்கள். காட்டடி காட்டினார்கள் இருவரும். பவர்பிளே முடியும் முன்னரே மிகப்பெரிய இலக்கை அடைந்தனர். லீவிஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சாம்சன் 28 ரன்னில் வெளியேறினார். பின்னர் டுபே எனும் ஒரு மொன்ஸ்டர் வந்து சேர்ந்தான். அதற்கு முதல் ஜெயஸ்வால் வெறும் 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சிவம் டுபேயும் சும்மா விடுவதாயில்லை. மரண காட்டு காட்டினான். 105 மீட்டர் சிக்ஸ் எல்லாம் அடித்து சென்னையை பயம் காட்டினான் ,அவ்வளவு அடி. தொடர்ந்து வந்த பிலிப்ஸ் கூடவே நின்று போட்டியை வெறும் 17.3 ஓவர்களில் வென்று முடித்துக் கொடுத்தார்கள்.

இறுதியாக பரிசு வழங்கும் போது 200 அல்லது 250 அடித்தால் கூட ராஜஸ்தான் விரட்டிப் பிடித்திருப்பார்கள் போல என்று தோனி சொன்னார். 200 போட்டியில் விளையாடினாலும் இன்னும் தலைக்குத் தன்னடக்கம் தான். மனதாரச் சொன்னால் இன்று ராஜஸ்தான் உண்மையிலேயே றோயலாகத்தான் விளைாடினார்கள் பெயரிற்கேற்றாற்போல் . அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் 6 இடத்தைப்பிடித்து விட்டனர். உ்ண்மையில் மற்ற 2 இடத்தை பிடிக்க மிகப்பெரும் யுத்தம் ஒன்று காத்துக் கொண்டு உள்ளது. So அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டுள்ளோம்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.