IPl T20 -2021 MI vs SRH Match No 55

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு அருமையான போட்டி நடந்தது. யாரும் எதிர்பார்க்காத போட்டி. IPl T20 -2021 MI vs SRH Match No 55 இந்த போட்டிதான் இரண்டு பேரின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடியதாக அமைந்தது. கூடுதலாக KKR தான் ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள். டொஸ் வென்ற மும்பை முதலில் துடப்பாட தீர்மானித்தது. இன்றைய போட்டியில் SRH இன் அணித்தலைவராக மணிஸ் பாண்டே பொறுப்பெடுத்திருந்தார். மும்பைக்கு கொஞ்சம் கஷ்டம் கொடுப்போம் என்றுதான் சொல்லியிருந்தார்.

MI Summary

றோகித் சர்மாவுடன் சேர்ந்து கிஷன் ஆரம்பம் முதலே அனைத்து புந்து வீச்சாளர்களையும் அடித்து நொறுக்கத் தொடங்கினர். என்னா அடி ,மரண அடி. வர்ணனையாளர்கள் சொன்னது போல் இசான் கிஷன் Pocket Dynamite தான். வெடி வெடி என வெடித்து தள்ளினான். மரண அடிதான் . ஏன் அந்த அடி என்றால் மும்பை 176 ரன்கள் வித்தியாசத்தில் SRH ஐ வென்றால் மாத்திரமே அவர்களுக்கு Play off ற்கு போகும் வாய்ப்பு கிடைக்கும். அதற்குதான் அவ்வளவு வெடி சரவெடி. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். Sunrisers Hyderabad கொடுத்த ரன்னைப்பார்த்தால் KKR ற்குதான் Sunset ஆக இருந்திருக்கும். வயித்துல புளிய கரச்சிட்டானுகள்.

வெறும் 4.2 ஓவர்களில் இசான் கிஷன் 16 பந்துகளில் 50 ரன்னைபெற்றார். றோகித் கொஞ்சம் சறுக்கினாலும் பின்னர் வந்து சேர்ந்த பாண்டியாவும் சறுக்க கூடவே பொல்லாத பொலார்ட்டும் சொதப்பினார்கள். Finally வந்த சூர்யகுமார் யாதவ் வெளுத்து வாங்கினான். ரன் போன போக்கைப் பார்த்தால் 300 தாண்டும் போல இருந்திச்சு. But இறுதியாக கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களும் ( 4 x 11 and 4x 6) and Sooriyakumar 40 பந்துகளில் 82 ரன்களும் ( 4 x 13 and 3x 6) எடுத்திருந்தனர். So ஒரு மாதிரியாக கோல்டர் ரன் ரேற் ஏறுவதை குறைத்து கோல்ட் பண்ணி பிடித்திருந்தார்.இறுதியில் 235 என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

SRH Summary

மும்பை SRH ஐ 65 ஓட்டங்களுக்குள் சுருட்டினால் மாத்திரமே Play off ற்குப் போகலாம். But முடியுமா ???? அப்படியே றோய் and அபிசேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அட்டகாசமாக ஆடி மும்பைக்கு மரண பயத்தை காட்ட ஆரம்பித்தார்கள். 2 ஆவது ஓவரிலேயே வெற்றி வாய்ப்பு கை நழுவி போய் விட்டதை உணர்ந்தார்கள் மும்பை அணியினர். அத்துடன் வந்த மற்றவர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்கள். But தலைவர் மனிஸ் பாண்டே மட்டும் இறுதி வரை நின்று Team 193 ரன்கள் வரை பெற அணியை வழி நடாத்திச் சென்றார்.

றோய் 34 அபிஷேக் சர்மா 33 மனிஸ் பாண்டே 69 மற்றும் பிரியன் ஹர்க் 29 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றியின் விழிம்பு வரை நடாத்திச் சென்றார்கள். இருந்தாலும் SRH வெற்றி பெற்றால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஆனாலும் மும்பை வென்றும் வெளியெறிய நிலை. என்ன கொடுமை சரவணா இது….

அத்துடன் KKR அணியினர் qualified ஆனார்கள். 4 வது இடத்தையும் எட்டிப் பிடித்தார்கள். RR , SRH அணியினர் 14 போட்டிகளையும் மந்தமாகவே ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் எழுச்சியுடன் விளையாடினார்கள் ஆனால் அதிஸ்டம் இல்லை. மும்பை இந்த பெட்டிங் ஸ்டைலை ஏற்கனவே கடைப்பிடித்திருந்தால் உள்ளே போயிருக்கலாம்.IPl T20 -2021 MI vs SRH Match No 55 இந்த போட்டியானது அனைவருக்கும் ஒரு பாடத்தை கற்பித்து இருந்தது.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.