Getting Birth/Death/Marriage Certificate Via Online
வணக்கம் உறவுகளே, உங்களுக்குத் தெரியுமா நமது நாட்டில் மக்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சேவையை பற்றி என்ன என்று கேட்கின்றீர்களா ???அதுதான் நாம் மேலே தலைப்பாக இட்டுள்ள Getting Birth/Death/Marriage Certificate Via Online விடயத்தைப்பற்றித்ததான். ஆம் உண்மையிலே சிறப்பான சேவை தான் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். அதைப்பற்றி இந்த பதிவில் தெளியப்படத்தி பேச இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது எமக்கு. So வாருங்கள் பதிவுக்குள் செல்வோம். தலைமை பதிவாளர் திணைக்களம் -இலங்கை இவர்களினால் மேற் கூறிய சேவை வழங்கப்படுகின்றது.
அவர்களது தளத்தில் என்ன உள்ளது??
பிறப்பு, இறப்பு and விவாகச் சான்றிதழ்களை (Birth/Death/Marriage Certificate) வழங்குவதற்கான பயனுள்ள (Online) தீர்வின் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும். இந்நிகழ்நிலைச் சேவையானது பிறப்பு, விவாகம் அல்லது இறப்பு சான்றிதழ்களின் உறுதிசெய்யப்பட்ட பிரதிகளைக் கோருவதற்கும், சரிபார்ப்பதற்குமாக பொதுமக்களிற்காக முன்மொழியப்பட்ட தீர்வாகும். இந்தச் சேவையினை ஆங்கிலம், சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது அவர்களின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ஆகும். உண்மையை சொல்லப்போனால் பிரதேச செயலகங்கள் and மேற்படி சான்றிதழை பெறக்கூடிய திணைக்களங்களில் மிகப்பெரிய பந்தியில் நின்று வேர்வையிலும் மழையிலும் கஸ்டப்பட்டு விண்ணப்பிப்பதை விட மிக இலகுவாக வீட்டில் இருந்த படி விண்ணப்பிக்கலாம். அலைச்சலும் இல்லை உடல் அசதியும் இல்லை. And also உங்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில் விண்ணப்பிக்க கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. For example இலங்கையில் பாவனையில் உள்ள மூன்று மொழிகளிலும் பயன்படுத்தலாம். இதை விட வேற மொழி சேர்ப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சகட்ட பயன்பாடு இல்லாவிடினும் முக்கியமான ஒரு Update என்றுதான் சொல்லவேண்டும்.
Getting Birth/Death/Marriage Certificate Via Online எப்படி??
First of all அதாவது முதலில் அவர்களது இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அதை அவர்கள் eBMD Online Portal என்று அழைக்கின்றார்கள். அதற்குரிய முகவரி https://online.ebmd.rgd.gov.lk/ என்பதாகும். அங்கு சென்றதும் கீழ்வரும் ஒரு இடைமுகத்தை ( User Interface) நீங்கள் காணலாம்.
இங்கே எமது மொழியை தெரிவு செய்து உள்நுழைய வேண்டும். இங்கு நாம் தமிழை தெரிவு செய்துள்ளோம். பின்னர் வரும் இடைமுகத்தில் தனது தனிப்பட்ட விபரங்களையும் கைத்தொலைபேசி இலக்கத்தையும் கட்டாயமாக வழங்க வேண்டும் . பின்னர் Pin ஐ அனுப்புக என்ற Button ஐ Click செய்யவும்.அங்கு குறிப்படப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு OTP ( One time Password ) அதாவது ஒரு தடவை மட்டும் பாவிக்ககூடிய கடவுச்சொல் வரும்.

அந்த நேரம் ஒரு Popup தோன்றும் அதிலே எமக்குக் கிடைத்த Pin number ஐ கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் Verify என்ற பொத்தானை அழுத்தவும்.

உங்களுக்கு Pin number கிடைக்கவில்லை என்றால் Resend Pin என்ற பொத்தானை (Button) ஐ Click செய்யவும். திரும்பவும் இதே தொலைபேசி எண் வழங்கும் படிமுறையை தொடரவும். சரியாக எல்லாவற்றையும் உள் இட்ட பின்னர் வரும் User Interface Windows வில் தேவையான அனைத்து விடயங்களையும் கொடுங்களில். முக்கியமாக என்ன சான்றிதழ் உங்களுக்குத்தேவையோ அதை தெரிவு செய்யுங்கள். அத்துடன் சான்றிதழ் எப்படி கிடைக்கப்பெற வேண்டும் என்பதையும் தெரிவு செய்யுங்கள் உதாரணமாக Courier or Collect from DS’ selected as the delivery type என்பதில் தெரிவு செய்யுங்கள். Courier என்றால் Speed Post மூலம் நமக்குக்கிடைக்கும். Collect from DS என்றால் எந்த DS Office சென்று நாம் பெற்றுக் கொள்வோம் என்பதைக்குறிக்கின்றது.
அடுத்த மக்கியமான விடயம் நீங்கள் எந்த முகவரி குறிப்பிடுகின்றீர்களோ அதனுடைய மாவட்டம் மற்றும் DS Office ஐ சரியாக குறிப்பிடுதல் வேண்டும். இல்லையென்றால் எங்கு செல்லும் என்று யாரோ அறிவார்… பினன்ர் Submit Button ஐ தெரிவு செய்ய வேண்டும். இறுதி படிவம் அங்குதான் தோன்றும் அதைப் பாருங்கள் கீழேயுள்ள படத்தில்.உதாரணமாய இங்கு நாம் பிறப்புச் சான்றிதழை கோரியுள்ளோம் என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

So தேவையான அனைத்தையும் நிரப்பியதன் பின்னர் பதிவேற்றச் சான்றிதழ் என்பதை Click செய்க. Finally உங்களது பிறப்புச்சான்றிதழ் கீழே படமாக தெரியவரும்.

Finally கன்போம் என்பதைக் கிளிக் செய்தால் Pay என்ற button தோன்றியிருக்கும். Again அதைக் கிளிக் செய்ததும் எத்தனை பிரதிகள் தேவை என கேட்கப்படும் So நீங்கள் அதிகபட்சமாக 5 பிரதிகள் தான் வழங்கலாம். Finally உங்களது கைத்தொலைபேசிக்கு ஒரு ( SMS) கிடைக்கும் அதில் எப்படி கட்டணம் செலுத்தவேண்டும் என்று எல்லா விபரங்களும் அடங்கியிருக்கும். இது பெரிய படிமுறை போல் உங்களுக்கு தோன்றும். ஆனால் செய்யத் தொடங்கியதும் ஒரு 2 நிமிட வேலையாகத்தான் இருக்கும். முக்கியமான விடயம் தேவையான விபரங்களை சரியாக வழங்கிக் கொள்ளுங்கள்.நீஙகள் விண்ணப்பம் செய்தால் , எத்தனை நாட்களுக்குப் பின்னர் கிடைத்தது என Comment பண்ணவும்.
நாளின் எந்த நேரத்திலும் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் திணைக்களத்தின் வேலை நாட்களில் மட்டுமே செயலாக்கப்படும். இதுவும் அவர்களின் பதிவுதான்.Because Now Pandemic Situation.
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.