Free Tamil E-Books

எல்லோருக்கும் காலை வணக்கம், இன்றைய பதிவு வாசிப்புப் பிரியர்களுக்குரியது என்று சொன்னால் மிகையாகாது. அது என்ன என்று கேட்கின்றீர்களா???? வாருங்கள் என்ன என்று பார்ப்போம். இன்றைய அவசர தொழிநுட்ப காலத்திலே வாசிப்பு என்பது இலைமறை காயாகவே உள்ளது. யார்டா இந்தக் காலத்தில் வாசிக்கிறது என்று நீங்கள் சொல்வது கேட்கின்றது. Anyhow வாசிப்பு ஒரு மனிதனை பூரணமானவனாக மாற்றுகின்றது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. So Free Tamil E-Books எதைப்பற்றியது என்று விளங்கியிருக்கும்.

உலகின் மிகப்பிரபல்யமானவர்கள் வாசிப்பைப்பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பாருங்கள்.இங்கு சிலவற்றையே தருகின்றோம் இன்னும் அதிகம் உள்ளன. அவற்றையும் தந்தால் நாம் சொல்ல வந்தது மறந்து போய்விடும்..

  • வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
  • மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்
  • புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.
  • எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா
  • போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்
  • உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு
  • ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.
  • ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
  • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் பிராய்டு.  
  • நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. – மார்க் டிவைன் 

Free Tamil E-Books இணையத்தளம் பற்றிய கருத்துக்கள்.

நாம் இங்கு வெளிக்கொணர இருப்பது ஒரு இணையத்தளம் பற்றியது ஆகும். ஆம் இங்கே பல மின்னூல்கள் குவிந்து கிடக்கின்றன. அது மட்டும் இல்லை புத்தகங்கள் அனைத்தும் வகை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள்,வரலாறு என அங்குண்டு. கிட்டத்தட்ட 70 இலட்சம் பதிவிறக்கங்களைத்தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. அவர்களது தாரக மந்திரம் என்னவென்றால் உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்”. இதை விட வேறு என்ன வேண்டும்.

Free Tamil E-Books இந்த லிங்கைக் கிளிக் செய்து அவர்களது இணையத்தளத்திற்கு சென்று வாசித்து இன்புறுங்கள்.அத்துடன் நீங்கள் எந்த வகையான சாதனத்திலும் அவர்களது தளத்திலிருந்து தரவிறக்கிய மின்நூல்களை வாசிக்கலாம் அதுதான் இன்னும் எமக்கு பிடித்திருக்கின்றது. For example Android, iOS, Kindle and PDF readers எதுவாயிருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடலாம்.

So மேலே காட்டப்பட்ட அனைத்திலும் வாசித்துக் கொள்ள முடியும். Actually நாம் உங்களை சொர்க்க வாசலுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் உள்ளே செல்ல நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். -ஆபிரகாம் லிங்கன்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

Leave a Reply

Your email address will not be published.