Domain Name and Hosting Websites

Introduction

நீங்கள் ஒரு Web Developer ஆக இருந்தால் கட்டாயமாக இந்த பதிவு உங்களுக்குத்தான். இல்லாவிடினும் உங்களிடம் ஒரு Website இருந்தால் அதை எப்படி Online ற்கு கொண்டு வருவது என்பது பற்றிய பதிவுதான் இது . சரி வாருங்கள் பதிவுக்குள் செல்வோம். Domain Name and Hosting Websites பெயரைப் பார்த்தாலே தெரியும் என்ன சொல்ல போகின்றோம் என்று.

முதலில் நீங்கள் உங்களது Website ஐ Online ற்கு கொண்டு வரவேண்டும்என்றால், அதை ஒரு Online Folder ற்குள் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தாலும் அதைப்பார்க்க ஒரு பெயர் வேண்டும். கிட்டத்தட்ட நாம் எமது PC or Laptop எங்கு என்றாலும் ஒரு Folder ஐ போட்டுவைத்துக் கொண்டு அதன் பெயர் என்ன அது எங்குள்ளது எனத்தெரிந்தால் நாம் அதை பார்க்கலாம். அதே நிபந்தனைதான் இதுவும். So Folder ஐ போட ஒரு இடம் and அதற்குரிய பெயர். அவை இரண்டும் இருந்தால் எமது Website ஐ Online ற்கு கொண்டு வந்து விடலாம்.

Choosing Domain Name ( எவ்வாறு Domain Name ஐ தெரிவு செய்வது).

இந்த சேவையை செய்வதற்கு இலங்கையில் பல நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான நிறுவனங்களைப்பற்றி தான் நாம் பார்ப்போம். First of all LK Domain Registry பற்றிப் பார்ப்போம். இவர்கள் தான் இலங்கையின் பிரபல்யமான Domain Name and Hosting நிறுவனமாகும். இங்கிருந்துதான் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இங்கு சென்று நமக்குத் தேவையான பெயரைப் பெற்றுக்கொள்ளலாம். அதை நாம் Domain Name என்போம். உதாரணமாக எமது இணையத்தள முகவரியான infodatalanka என்பது ஒரு Domain Name ஆகும். அது போல் உங்களுக்கு என்ன பெயர் தேவையோ அதைக் கொடுத்து சோதித்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே வேறு யாராவது அதை பாவித்தால் நாம் அந்த பெயரை பாவிக்கமுடியாது So நாம் வேறு பெயரைத்தான் எடுக்க வேண்டும். அதிலும் எமது பெயரிற்கு பின்னால் .lk, .com, .org, .gov.lk and .net போல் Top-level domain (TLD) எடுப்பதற்கு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொன்றிற்கும் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும். However பெயரைத்தெரிவு செய்யும் போது நமது இணையத்தளத்திற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும். அப்படி இருந்தால்தான் நமது வியாபாரம் என்ன நாம் சமூகத்தில் என்ன செய்கின்றோம் என அனைத்தையும் பிரதிபலிக்கும்.

இங்கு .lk என்றால் நாம் இலங்கையில் (Sri lanka ) யில் உள்ள பாவனையாளர்களுக்குத்தான் இந்த இணையத்தளத்த நிர்வாகிக்கின்றோம் என்று பொருளாகும். இலங்கையின் பிரபல்யமான எல்லா நிறுவனங்களும் .lk Domain Name தான் பெயர் வைத்திருப்பார்கள். அதே போல் நாம் ஒரு வியாபார இணையத்தளம் கொண்டிருப்போமானால் .com என்று Domain Name வைத்திருப்போம். .com meaning Commercial ஆகும். அதே போல் ஒரு நிறுவனமாக இணையத்தளத்தை காட்ட வேண்டுமெனில் .org (Organization) ஐ பயன்படுத்துவோம். Finally எமது நாட்டின் பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களின் இணையத்தள முகவரி . gov.lk என்று அமைந்திருக்கும். Because Government என்பதாகும். அந்த முகவரியை வாங்க பொதுமக்களால் முடியாது ஏன் என்றால் அவை அனைத்தையும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டும் தான் அதனைப் பாவிக்க முடியும்.

Hosting websites , எவ்வாறு Hosting செய்வது.

Any how ஒரு Domain Name ஐ தெரிவுசெய்து எடுத்த பின்னர் அதை Upload பண்ண ஒரு Hosting side வேண்டும். So அதையும் நாம் மேலே கூறிய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அவர்களது Agent களிடமும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் விலை தான் சிறிது சிறிது மாற்றம் அடையும். மற்றப்படி அனைத்தும் பொதுவானதே. அதை நீங்கள் மேலுள்ள இணைப்பில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தபதிவானது ஒரு அறிமுகம் மாத்திரமே , இந்த Domain Name and Hosting Websites என்பது தொடராக இன்னும் வெளிவரும் என்பதையும் எப்படி ஒரு இணையத்தளத்திற்கு பெயரைப் பெற்று Online இல் Host பண்ணுவது என்பது வரை தெளிவாக எம்மால் வழங்கப்படும். ஆகவே அடுத்த பதிவில் பெயரைத் தேடுவது எவ்வாறு சிறந்த Hosting ஐ தெரிவு செய்வது எவ்வாறு என்பது பற்றிப்பார்ப்போம்.

அடுத்த தொடரை பார்க்க இங்கே( Domain Name and Hosting Websites-2 )அழுத்தவும்.

And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.

One thought on “Domain Name and Hosting Websites

Leave a Reply

Your email address will not be published.