Domain Name and Hosting Websites -02
இன்று Domain Name and Hosting Websites எ்னற தலைப்பின் இரண்டாவது பதிவைப்பார்ப்போம். வாருங்கள் உள்ளே போவோம் என்ன நடக்கின்றது எனப் பார்க்க. Domain Name ஐ கட்டாயமாக நாம் நல்ல முறையில் தெரிவு செய்ய வேண்டும் அது தான் நமது இணையத்தளத்திற்கு வாடிக்கையாளர்கள் வருவதற்கு இடம் அளிக்கின்றது. So Domain Name ஐ சரியாக தெரிவு செய்வது மிக முக்கியமாகும்.
எப்படி நல்ல Domain Name ஐ தெரிவு செய்யலாம் (Domain Name and Hosting Websites )???
உங்களது Domain Name ஆனது தான் உங்கள் இணையத்தளத்தின் first impression ஆகும். பாவனையாளர்கள் இதைத்தான் முக்கியமாக அவதானிப்பார்கள். நல்ல Domain Name நமக்கு அதிகளவான வாடிக்கையாளர் வருவதற்கு வழிவகுக்கும். கொஞ்சம் ஏடாகூடமான பெயர் அவர்களை ஓட விரட்டும். அத்தடன் SEO ranking ற்கும் வழி வகுக்கும். SEO ranking பற்றி பதிவுகள் வரும். இந்த SEO ranking தான் உங்களது இணையத்தளத்தை வாடிக்கையாளர்கள் தேடும் போது முதலில் கொண்டு சேர்ப்பதற்கு உதவுகின்றது. For example நீங்கள் Google இல் ஏதாவது search பண்ணினால் முதலில் வருவது எந்த இணையத்தளம் என்பதை தீர்மானிப்பது இந்த SEO ranking தான். Finally சரியான Domain Name தான் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் நிர்ணயிக்கும். அதுதான் உங்கள் brand ஆகும்.
Domain Name ற்குப்பின்னால் வரும் (.lk, .com, .org, .net) Extension also கவனிக்கப்படவேண்டியது ஆகும். Approximately இலங்கையிலுள்ள 75% ஆன இணையத்தளங்கள் .com ஐயே கொண்டுள்ளது. ஏனென்றால் அந்த பெயர்தான் இலகுவாக வாயில் நுழைகின்றது அத்துடன் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இலகுவாக இருக்கின்றதாம். www.பிச்சுமணி.Com . விளங்குகின்றதா வடிவேல் ஐயாட நகைச்சுவை. So தேவையானதை தெரிவுசெய்யுங்கள்.
அத்துடன் உங்களது Domain Name ஆனது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்க வேண்டும். வேறு நபர்கள் பாவிக்கும் பெயரை தவிர்ப்பது மிக நல்லம். அதை Be unique என்று சொல்வார்கள். அத்துடன் மிகப்பெரிய Domain Name ஆக தெரிவு செய்வதும் நல்லது அல்ல. சிறிய பெயராக இருப்பது விரும்பத்தக்கது. Keep it short and easy to type அப்படி இருந்தால் தான் இலகுவாக தேடலாம் நமது இணையத்தளத்தை. இல்லாவிடின் பெரிய பெயரை type பண்ணும் போதே வெறுத்து விடும் பாவனையாளர்களுக்கு.
அத்துடன் Domain Name இல் ஏதேனும் இலக்கங்கள் விசேட சொல்லுருக்கள்(-, @, _, 1-9) சேர்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. Avoid Hyphens And Numbers.மேலே நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள சொற்கள் தான் Domain Name ஐ தெரிவு செய்யும் போது முக்கிய பங்காற்றுபவை. அவற்றை நினைவில் வைத்து பெயரை தேர்வு செய்யுங்கள்.
எப்படி Domain Name ஐ பெற Service Provider ஐ அணுகுவது???
நாம் ஏற்கனவே குறிப்பிட்ட LK Domain Registry இணையத்தளத்திற்கு செல்லவும். அங்குள்ள HomePage இல் உங்களுக்குத்தேவையான பெயரை தேடவும். Example நீங்கள் Mobile Phone வியாபாரம் செய்கின்றீர்கள் ஆகவே உங்களுக்கு SLMOBILE என்று பெயர் வேண்டும் என வைத்துக் கொள்வோம். கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.எப்படி தேடுகின்றோம் என்று.
Type Domain Name and click Search If The Name Available It will show here in Green Color. Price List and other suggestions from there side.
ஆகவே இப்படிக் காட்டப்படும் . எது தேவையோ அதை தெரிவு செய்ய Add to cart என்பதை கிளிக் பண்ணி பதிவு செய்து கொள்ளுங்கள் . And also நீங்கள் தேடும் Domain Name இல்லாவிடின் எப்படி காட்டப்படும் எனப் பார்ப்போம்.

எமது இணையத்தள முகவரியை தேடும் போது அது இல்லை எனதெளிவாக காட்டப்படுகின்றது. ஆகவே வேறு பெயரைத் தேடவும். எமது அடுத்த பதிவில் எவ்வாறு LK Domain Registry இன் Agents களிடம் பெயரைத் தேடுவது எனப்பார்ப்போம்.
இதன் முந்தைய பதிவான Domain Name and Hosting Websites -01 ஐப் பார்வையிடுவதற்கு அழுத்தவும்.
And எமது இணையத்தளமான https://infodatalanka.lk/ வில் ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவுகளையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
நன்றி ,மீண்டும் தொடர்ந்து வருவோம்.
Pingback: Domain Name and Hosting Websites - InfodataLanka